குழந்தைகளுக்கான முதல் புக்கர் பரிசு... 50,000 பவுண்டு பரிசுத் தொகை!
குழந்தை இலக்கியத்திற்காக வழங்கப்படும் முதல் புக்கர் பரிசு 2027-க்கான இறுதிப்பட்டியலைப் புக்கர் பரிசு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட மொத்தம் 89 நூல்களில் இருந்து 8 நூல்கள் இறுதிப்பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த விருதை வெல்லும் நூலுக்குப் 50,000 பவுண்டுகள் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
குழந்தைகளுக்கான புக்கர் பரிசின் தொடக்க ஆண்டிலேயே பல்வேறு கதைக்களங்கள் மற்றும் எழுத்து நடைகளைக் கொண்ட 89 படைப்புகள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றிலிருந்து சிறந்த 8 நூல்கள் இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த இறுதிப்பட்டியலில் கை பாஸ் எழுதிய ‘தி வொர்ஸ்ட் திங் தட் குட் பாசிபிளி ஹேப்பன்’, கேத்தரின் புரூட்டனின் ‘டாட்போல் சம்மர்’ மற்றும் ‘வார்’, இக்பால் ஹுசைனின் ‘தி நைட் ஐ பாரோவ்டு டைம்’ உள்ளிட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன.
புக்கர் பரிசு அறக்கட்டளை அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் புதிய பிரிவின் வெற்றியாளர், 2027 பிப்ரவரி 2-ஆம் தேதி லண்டனில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படுவார். உலகளவில் இலக்கியப் படைப்புகளுக்கு மிக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் புக்கர் பரிசு, முதன்முறையாகக் குழந்தைகளுக்கான பிரிவையும் விரிவுபடுத்தியிருப்பது வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.