அமெரிக்கச் செனட்டில் முதல் முஸ்லிம் உறுப்பினர்... டாக்டர் அப்துல் எல்-சையத் சாதனை வெற்றி!
அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மிச்சிகன் மாநிலத்திற்கான செனட் சபை தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் அப்துல் எல்-சையத் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். அமெரிக்க செனட் சபை வரலாற்றிலேயே தேர்ந்தெடுக்கப்படும் முதல் முஸ்லிம் உறுப்பினர் என்ற பெருமையை டாக்டர் அப்துல் எல்-சையத் பெற்றுள்ளார்.
குடியரசுக் கட்சியின் முன்னாள் பிரதிநிதிகள் சபை உறுப்பினரான மைக் ரோஜர்ஸை தோற்கடித்து இவர் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரசாரத்தின் போது தன் மீதும் தனது அடையாளம் குறித்தும் தொடுக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்புப் பிரசாரங்கள் மற்றும் அவதூறுகளைத் தகர்த்தெறிந்து மக்கள் ஆதரவுடன் இம்மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
மிச்சிகன் மாநிலத்தின் மருத்துவ அலுவலராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட டாக்டர் அப்துல் எல்-சையத், மக்கள் நலன் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டு பிரசாரம் மேற்கொண்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளார்.