இன்று தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முழு லிஸ்ட் - உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் அதிமுகவில் பெரும் சரிவு!

 

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்களின் அரசியல் தாக்கம் குறித்துப் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் வேளையில், தற்பொழுது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குப் பலத்த அடியைக் கொடுக்கும் விதமாக, அக்கட்சியின் மிக முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எக்ஸ் எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமான முக்கிய நிர்வாகிகள் இன்று (ஜூன் 6) அதிமுகவிலிருந்து மொத்தமாக விலகி, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்துள்ளனர்.

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 4 முக்கிய முன்னாள் அமைச்சர்கள் இன்று தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

அதிமுகவின் முந்தைய ஆட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வீட்டுவசதி வாரிய அமைச்சராகப் பொறுப்பு வகித்த உடுமலை ராதாகிருஷ்ணன் உடுமலை ராதாகிருஷ்ணன்  திருப்பூர் மாவட்ட அதிமுகவின் முக்கியத் தூணாக விளங்கியவர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் மூத்த தலைவர் எம்.சி.சம்பத் எம்.சி.சம்பத் . முந்தைய ஆட்சியில் வணிகவரி மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு முக்கிய மூத்த தலைவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எஸ்.எம்.ஆனந்தன். அதிமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.

தென் மாவட்டமான தூத்துக்குடி கோவில்பட்டி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ மற்றும் முந்தைய அதிமுக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக செல்வாக்குடன் வலம் வந்த கடம்பூர் ராஜூ.அமைச்சர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் தங்களுக்கு எனத் தனி வாக்கு வங்கியை வைத்துள்ள கோவிந்தசாமி, சுந்தரராஜூ, ராஜமுத்து, மான்ராஜ், பன்னீர்செல்வம், ராஜவர்மன் (சாத்தூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ), வி.கே.ஆர்.சீனிவாசன் கோவிந்தசாமி, சுந்தரராஜூ, ராஜமுத்து, மான்ராஜ், பன்னீர்செல்வம், ராஜவர்மன் (சாத்தூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ), வி.கே.ஆர்.சீனிவாசன் என 7 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று தவெகவில் இணைந்துள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அதிமுகவின் இந்த மெகா விக்கெட் வீழ்ச்சி அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கணக்குகள்: ஓமனுடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் திருப்பூர், கோவை போன்ற கொங்கு மண்டல ஜவுளித் தொழிலுக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ள பொருளாதாரச் சூழலில், அதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன் போன்ற அசுர பலம் கொண்ட அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைந்திருப்பது, கொங்கு பகுதியில் தவெகவின் பலத்தை இருமடங்காக உயர்த்தும் எனப் பார்க்கப்படுகிறது.