நாளை நடைபெற இருந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்ட தொடக்க விழா தேதி மாற்றம்- அரசு அறிவிப்பு!
Sep 14, 2026, 09:10 IST
சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் நாளை செப்டம்பர் 15ம் தேதி நடைபெறவிருந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத் தொடக்க விழா தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ளவிருந்த இத்திட்டத்தின் தொடக்க விழா மற்றும் புதிய தேதி குறித்த உறுதியான தகவல்கள் தமிழக அரசு தரப்பில் இருந்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே நாளை நடைபெறவிருந்த தொடக்க விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜூன் 22ம் தேதி முதல் பிறக்கும் அனைத்துக் குழந்தைளுக்கும் இத்திட்டத்தின் மூலம் அரசு சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.