"இரவல் காலில் நடக்கிறது தவெக ஆட்சி; விரைவில் கவிழும்" - எடப்பாடி பழனிசாமி பரபரப்புப் பேச்சு!

 

கூட்டணிக் கட்சிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றால் தமிழகத்தில் நடந்துவரும் தவெக அரசு உடனே கவிழ்ந்துவிடும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.

மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யாமலும், உழைக்காமலும் அதிகாரத்திற்கு வந்த ஒரே கட்சி தவெகதான் என்றும், அதிமுக ஆட்சியைப் போல மக்களுக்குத் திட்டங்களும் நன்மைகளும் கிடைத்த பொற்கால ஆட்சி வேறு எதுவும் இல்லை என்பதுதான் வரலாறு என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவெக அரசு தற்போது 'இரவல் காலில்'தான் நடந்து கொண்டிருப்பதாகவும், கூட்டணிக் கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டால் இந்த அரசு உடனடியாகக் கவிழ்ந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ரீல் விட்டே தவெக ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டுப் பிரச்சினைகள் குறித்தும் இந்த அரசுக்கு எুলிவிதக் கவலையும் இல்லை எனத் குற்றம்சாட்டினார்.