“எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி நடக்கிறது..” - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெ.சண்முகம் பேட்டி!

 

கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தவெகவுடன் கூட்டணி வைத்துள்ள போதிலும் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் கட்சியின் நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போது வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவில் தான் தவெக ஆட்சி நடைபெற்று வருவதாகப் பெ.சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்பதற்காக அவர்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்மூடித்தனமாக ஆதரவு தருகிறோம் என்று அர்த்தமில்லை என்று அவர் தெரிவித்தார்.

மக்கள் சார்ந்த எத்தகைய பிரச்சனைகளிலும் முன்பிருந்த அதே உறுதியான கொள்கை ரீதியான நிலைப்பாட்டையே தற்போதும் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.