நேரடி பயணத்தைத் தொடங்கிய குரு... இந்த 3 ராசிக்காரர்களுக்கும் இனி ‘குபேர’ யோகம் தான்!

 

குபேர யோகம் எப்படியிருக்கும் என்று தெரிந்துக் கொள்ளும் பாக்கியம் கிடைப்பதே ஒரு யோகம் தான்.அபரிமிதமான மாற்றங்கள் அடுத்தடுத்து தெரியும். நவகிரகங்களில் சுப பலன்களை வாரி வழங்குவதில் குரு பகவானுக்கு நிகர் எவருமில்லை. கடந்த சில காலமாக வக்ர நிலையில் (பின்னோக்கி) பயணித்து வந்த குரு, மீண்டும் தனது நேரடிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்த மாற்றத்தால் அடுத்த சில மாதங்களுக்கு இந்த 3 ராசிக்காரர்களின் காட்டில் பண மழை பொழியப் போகிறது.

மேஷ ராசிக்கு 3-ம் வீட்டில் குரு பகவான் நேரடிப் பயணத்தைத் தொடங்குவதால், உங்களது தன்னம்பிக்கை பலமடங்கு உயரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பழைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியில் முடியும். இளைய சகோதர வழியில் அனுகூலம் உண்டாகும்.

ரிஷப ராசிக்கு 2-ம் வீடான 'தன ஸ்தானத்தில்' குரு பகவான் அமர்வதால், பொருளாதார ரீதியாகப் பொற்காலம் தொடங்குகிறது. நிலுவையில் இருந்த வராக்கடன்கள் வசூலாகும். தங்கம் மற்றும் சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடி வரும். பணியிடத்தில் உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி ததும்பும்.

மிதுன ராசியிலேயே (ஜென்ம குருவாக) குரு பகவான் நேரடிப் பயணத்தைத் தொடங்குவதால், இதுவரை உங்களை வாட்டி வதைத்த மனக்கவலைகள் பறந்தோடும். வேலையில்லாமல் தவிப்பவர்களுக்குப் பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். மாணவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் புதிய மைல்கல்லை எட்டுவார்கள். வீட்டில் சுப காரியங்கள் (திருமணம், காதுகுத்து) நடப்பதற்கான சூழல் அமையும்.