உலகக் கோப்பை ஹாக்கி... வெற்றியுடன் கணக்கைத் தொடங்கிய இந்தியா!

 

2026 ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்றுத் தொடரை நேர்மறையாகத் தொடங்கியுள்ளது.

நெதர்லாந்தின் அம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி வேல்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியின் 8-வது நிமிடத்திலேயே இந்திய அணியின் சஞ்சய் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் போட்டியின் 11-வது மற்றும் 43-வது நிமிடங்களில் 2 கோல்களைப் பதிவு செய்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். வலுவான வெற்றியுடன் தொடரைத் தொடங்கியுள்ள இந்திய அணி, தனது அடுத்தடுத்த லீக் போட்டிகளை எதிர்கொள்ளத் தீவிரமாகத் தயாராகி வருகிறது.