மனைவியின் மூக்கை அறுத்த கணவன்... தாய் வீட்டிக்கு போக அடம் பிடித்ததால் விபரீதம்!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பூர்வா பகுதியில் வசித்து வருபவர் ராகுல். இவரது மனைவி அனிதா. இந்த நிலையில், நேற்று ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என அனிதா கூறியுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதனையடுத்து எக்ஸில் பதிவிட்ட ஹர்டோய் போலீசார், இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதாகவும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். “குறிப்பிடப்பட்ட வழக்கு தொடர்பாக, இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் (கிராமப்புறம்) விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என ஹர்டோய் போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக அந்த பெண், தனது கணவர் அடிக்கடி தன்னுடன் சண்டையிடுவதாகவும், அதன் விளைவாக அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றதாகவும் கூறினார். இருப்பினும், அவர் 4 நாட்களுக்கு முன்பு திரும்பி வந்து, மீண்டும் ரக்க்ஷா பந்தன் நிகழ்வில் செல்ல திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!