அரசு கல்லூரிகளில் எம்.எட் சேர்க்கை - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
Aug 27, 2026, 19:00 IST
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2026-2027-ம் கல்வியாண்டிற்கான எம்.எட் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காகக் கால அவகாசம் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை விண்ணப்பித்தவர்களுக்கான முதற்கட்டச் சேர்க்கை ஆகஸ்ட் 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருவதுடன், இவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன.
இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் இரண்டாம் கட்டச் சேர்க்கைக்காக www.tngasa.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.