மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி!
மத்திய அரசு சார்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவர்களின் கல்வி நலனைக் காக்கும் வகையில் ஆண்டுதோறும் ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள, 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
மாணவர்களின் கல்விச் செலவுகள் மற்றும் கல்விக்கூடக் கட்டணங்களை ஈடுகட்டும் வகையில் ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை நேரடியாக வழங்கப்படுகிறது.
தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் முந்தைய ஆண்டின் உதவித்தொகையைப் பெறும் மாணவர்கள் தங்களது புதுப்பித்தல் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற விரும்பும் மாணவர்கள் https://socialjustice.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பார்வையிடலாம்.