புதிதாகப் பதவியேற்கும் 23 அமைச்சர்களின் முழுப் பட்டியல் வெளியீடு!

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான 'மக்கள் மாளிகையில்' இன்று (மே 21, 2026) காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதில் புதிதாகப் பதவியேற்க உள்ள 23 அமைச்சர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியலை மக்கள் மாளிகை வெளியிட்டுள்ளது.

கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தினால் (தவெக) தனித்து ஆட்சி அமைக்க இயலாத சூழல் நிலவியது.

இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவளித்தன. இதன் மூலம் ஆட்சி அமைப்பதற்கான பலம் கிடைத்ததை அடுத்து, கடந்த மே 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

அவருடன் முதற்கட்டமாக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்குக் கடந்த 16-ஆம் தேதி துறைகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தவெக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு இன்று தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான அழைப்பிதழைத் தலைமைச் செயலாளர் சாய்குமார் நேற்று வெளியிட்டார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு மக்கள் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்குகிறது. இவர்களுக்கு ஆளுநர் முறைப்படி பதவியேற்று வைக்க உள்ளார்.

அமைச்சரவையில் புதிதாக இணைய உள்ள 23 எம்.எல்.ஏ.க்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

  1. ஸ்ரீநாத் – தூத்துக்குடி தொகுதி

  2. கமலி.எஸ். – அவினாசி தொகுதி

  3. சி.விஜயலட்சுமி – குமாரபாளையம் தொகுதி

  4. ஆர்.வி.ரஞ்சித்குமார் – காஞ்சீபுரம் தொகுதி

  5. வினோத் – கும்பகோணம் தொகுதி

  6. ராஜீவ் – திருவாடானை தொகுதி

  7. பி.ராஜ்குமார் – கடலூர் தொகுதி

  8. வி.காந்திராஜ் – அரக்கோணம் தொகுதி

  9. பி.மதன் ராஜா – ஒட்டப்பிடாரம் தொகுதி

  10. கே.ஜெகதீஸ்வரி – ராஜபாளையம் தொகுதி

  11. எஸ்.ராஜேஷ்குமார் – கிள்ளியூர் தொகுதி (காங்கிரஸ்)

  12. எம்.விஜய் பாலாஜி – ஈரோடு தொகுதி

  13. டி.லோகேஷ் தமிழ்செல்வன் – ராசிபுரம் தொகுதி

  14. ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் – சேலம் தெற்கு தொகுதி

  15. ரமேஷ் – ஸ்ரீரங்கம் தொகுதி

  16. பி.விஸ்வநாதன் – மேலூர் தொகுதி (காங்கிரஸ்)

  17. ஆர்.குமார் – வேளச்சேரி தொகுதி

  18. கே.தென்னரசு – ஸ்ரீபெரும்புதூர் தொகுதி

  19. வி.சம்பத்குமார் – கோவை வடக்கு தொகுதி

  20. ஜெ.முகமது பர்வாஸ் – அறந்தாங்கி தொகுதி

  21. டி.சரத்குமார் – தாம்பரம் தொகுதி

  22. என்.மரிய வில்சன் – ஆர்.கே.நகர் தொகுதி

  23. கே.விக்னேஷ் – கிணற்றுக்கடவு தொகுதி

இன்றைய விரிவாக்கத்தின் மூலம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் (எஸ்.ராஜேஷ்குமார், பி.விஸ்வநாதன்) தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.