இன்று வெளியாகிறது வேட்பாளர் பட்டியல் - தவெக-வின் முதல் அரசியல் களம்!
Mar 22, 2026, 05:56 IST
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தனித்துப் போட்டியிடுவதாகவும், அக்கட்சியின் முழு வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் மிகப்பெரிய தேர்தல் இது என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்தப் புதுச்சேரி தேர்தல் பார்க்கப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு 'விசில்' சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், புதுச்சேரியின் அனைத்து 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகத் த.வெ.க அறிவித்துள்ளது. மக்களின் நேரடி ஆதரவைச் சோதித்துப் பார்க்கவே இந்தத் துணிச்சலான முடிவை அக்கட்சியின் தலைவர் விஜய் எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.