“தெருக்களில் சாதிப் பெயரை நீக்கும் அரசாணைக்குத் தடையில்லை” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

 

தமிழகத்தில் உள்ள தெருக்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழகத் தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீதிமன்றம் தற்போது முழுமையாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.

விசாரணையின்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், சமுதாயத்தில் சாதிய பாகுபாடுகள் எங்குமப் பார்க்கக் கூடாது என்ற விழிப்புணர்வும் மக்களின் மனநிலையில் ஆரோக்கியமான மாற்றமும் அவசியமாகக் கருதப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் இந்த முக்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள தெருப் பெயர்களில் உள்ள சாதி அடையாளங்கள் இனி முழுமையாக அகற்றப்பட்டு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.