இளம்பெண்ணைக் கொன்ற கள்ளக்காதலன்... மரத்தில் கட்டிவைத்துத் தாக்கியப் பொதுமக்கள்!

 

கர்நாடக மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் 3 குழந்தைகளின் தாயான பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டிவைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே சேகரப்பா நகரைச் சேர்ந்த நாகரத்னா (45) என்ற பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவருடன் நாகராஜ் (36) என்பவர் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், நாகரத்னாவின் வீட்டிற்கு வந்த நாகராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு திடீரென நாகரத்னாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்து பொதுமக்களும் பொதுமக்களும் சேர்ந்து, தப்பியோட முயன்ற கொலையாளி நாகராஜைப் பிடித்து அங்குள்ள தென்னை மரத்தில் கட்டிவைத்துத் சரமாரியாகத் தாக்கினர்.

இது குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த டவுன் காவல் துறையினர், பொதுமக்களின் பிடியில் சிக்கித் தவித்த நாகராஜை மீட்டுப் பாதுகாப்பாகக் கைது செய்ததோடு, இக்கொலைக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.