undefined

சந்திரன், குருவின் பார்வை... இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும்!

 

இன்று மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்குக் கூடுதல் லாபமும் அதிர்ஷ்டமும் கிடைக்க வாய்ப்புள்ளது. மற்ற ராசிக்காரர்கள் நிதானமாகச் செயல்படுவதன் மூலம் வெற்றிகளைப் பெறலாம்.

இன்று சந்திரன் மற்றும் குருவின் அனுகூலமான பார்வையால் சில ராசிகளுக்கு எதிர்பாராத நன்மைகள் தேடி வரும்.

மேஷம்:
இன்று உங்களுக்கு உற்சாகமான நாடாக அமையும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் இன்று கைகூடும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.

ரிஷபம்:
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மிதுனம்:
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். தொட்டது துலங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.

கடகம்:
நிம்மதியான நாள். தடைப்பட்ட சுப காரியங்கள் மீண்டும் தொடங்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.

சிம்மம்:
கற்பனைத் திறன் கூடும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பயணங்களின் போது கவனம் தேவை.

கன்னி:
உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்:
யோகமான நாள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபம் தரும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் கூடும்.

விருச்சிகம்:
திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போக வாய்ப்புள்ளது. மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதைத் தவிர்க்கவும். மதியத்திற்குப் பிறகு சுபச் செய்திகள் வரும்.

தனுசு:
தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். பழைய கடன்களை அடைப்பதற்கான வழி பிறக்கும். அரசு வழி உதவிகள் எளிதாகக் கிடைக்கும்.

மகரம்:
வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். விடாமுயற்சி வெற்றி தரும். மேலதிகாரிகளிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. மாலை வேளையில் மன அமைதி கிடைக்கும்.

கும்பம்:
செல்வாக்கு உயரும் நாள். பொதுப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தடைப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மீண்டும் உறுதியாகும். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மீனம்:
நிதானமும் பொறுமையும் தேவை. புதிய முயற்சிகளில் சற்றுத் தடைகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவது நல்லது.