தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு... ‘வேப்பனஹள்ளி, நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ-க்களிடம் தவெக குதிரை பேரம்!’ - ஆளுநரிடம் புகாரளித்த பின் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

 

தவெக தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்தவில்லை; திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி இழுக்கும் 'ஆள்பிடிக்கும்' ஆட்சியைத் தான் நடத்திக் கொண்டிருக்கிறது" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது மற்றும் ஜாமீன் விவகாரத்தைத் தொடர்ந்து, தவெக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகச் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று பிற்பகல் திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி நேரில் சென்றார். அங்குத் தவெக அரசின் சட்டவிரோத அரசியல் அழுத்தங்கள் குறித்து அதிகாரப்பூர்வப் புகார் மனு ஒன்றை அளித்த பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "திமுகவின் மூத்த தலைவர்களைத் தவெக-விற்கு இழுக்கப் பின்னணியில் மிகப்பெரிய குதிரை பேர அரசியல் நடந்து வருகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் ஆகியோரைத் தவெக-வில் இணையச் சொல்லி, அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வற்புறுத்தி வருகின்றனர்."

"எங்களது கட்சியின் மூத்த நிர்வாகி அனிதா ராதாகிருஷ்ணனைத் தவெக-வில் சேர்க்க அவர்கள் எவ்வளவோ முயன்றார்கள். அதற்கு அவர் மறுத்த காரணத்தினாலேயே, பழிவாங்கும் நோக்கில் அவரை நள்ளிரவில் கைது செய்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கித் துன்புறுத்தியுள்ளனர்." தற்போதைய தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகள் குறித்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி, திரைக்குப்

"தமிழ்நாட்டில் தற்பொழுது சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. தவெக அரசில் எந்தவொரு அதிகாரப்பூர்வப் பொறுப்பிலும் இல்லாத, அரசுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத சில வெளிநபர்கள், தமிழகக் காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நேரடியாகத் தொலைபேசியில் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றனர். இதன் மூலம் அரசு இயந்திரம் முற்றிலும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது."

தொடர்ந்து பேசிய அவர், "அரை நூற்றாண்டு காலப் பாரம்பரியமிக்கத் திமுகவை இதுபோன்ற மிரட்டல்களால் அசைத்துவிட முடியாது. தமிழ்நாட்டில் தவெக-வின் இந்த ஆள்பிடிக்கும் குதிரை பேர அரசியல் நீண்ட காலம் நீடிக்காது" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.