எடப்பாடிக்கு அடுத்த அதிர்ச்சி... அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் விலகல்!
அதிமுக அமைப்புச் செயலாளரும், காட்டுமன்னார்கோவில் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முருகுமாறன், கட்சியில் தனது அடிப்படை உறுப்பினர் பதவிகள் அனைத்திலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து விலகுவது குறித்த தனது முடிவுடைய கடிதத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முருகுமாறன் அனுப்பி வைத்துள்ளார். தற்போதைய தலைமையை நம்பிக் கெட்டவர்களில் தானும் ஒருவர் என்று தனது விலகல் கடிதத்தில் அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகுமாறன் கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மேலும், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராகவும் இவர் போட்டியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.