அடுத்த அதிர்ச்சி... நாடு முழுவதும் அக்.1 முதல் டிவி, ப்ரிட்ஜ், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விலை உயர்வு!
மூலப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு காரணமாக, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை 5 முதல் 8 சதவீதம் வரை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உற்பத்திக்குத் தேவையான செம்பு, அலுமினியம் மற்றும் எஃகு போன்ற அத்தியாவசிய மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் நிலவிவரும் போர்ப்பதற்றம் காரணமாகப் போக்குவரத்து மற்றும் தளவாடக் கட்டட்டணங்கள் உயர்ந்துள்ளன. இதனால் ஒட்டுமொத்த உற்பத்திச் செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஏசி, டிவி, வாஷிங் மெஷின் மற்றும் ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் இதன் காரணமாக உயரவுள்ளன. உற்பத்திச் செலவின் தாக்கத்தைச் சமாளிக்கும் பொருட்டு இந்த விலை உயர்வைச் செயல்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.