தூத்துக்குடியில் அடுத்த அதிர்ச்சி... சிறையிலிருந்த பெண் கைதிக்கு பாலியல் தொல்லை; காவல் மீது வழக்குப்பதிவு!
பாதுகாக்க வேண்டிய போலீசாரே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் என்ற காவலர், சிறையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணிடம் நள்ளிரவில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.
"சார்ஜர் இருக்கா?" எனப் பேச்சு கொடுத்து ஆரம்பித்து, பின்னர் அந்தப் பெண்ணுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துத் தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலாக அளித்த புகாரைத் தொடர்ந்து, தூத்துக்குடி தென்பாகம் போலீசார் களமிறங்கினர்.
பாலியல் துன்புறுத்தல், பெண்ணைத் துன்புறுத்தல் மற்றும் இந்தப் புகாரை வெளியே சொன்னால் "தீர்த்துக்கட்டிவிடுவேன்" எனப் பெண்ணை மிரட்டியதற்காக கொலை மிரட்டல் உள்ளிட்ட பலமான பிரிவுகளின் கீழ் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.