அதிமுகவில் அடுத்த விக்கெட்... கொள்கை துணைப்பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி ராஜினாமா!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த அப்சரா ரெட்டி, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியிலிருந்து விலகுவது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அப்சரா ரெட்டி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை:
"மிகவும் கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகும் முடிவை எடுக்கிறேன். இந்தத் தீர்மானம் எந்தவித தனிப்பட்ட வருத்தத்தினாலோ அல்லது மனக்கசப்பினாலோ எடுக்கப்பட்டதல்ல." எனது அரசியல் பயணம் இனி வேறொரு புதிய பாதையில் பயணிக்கலாம். ஆனால், மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எனது முதன்மை நோக்கம் என்றும் மாறாது."
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து தீவிர அரசியல் பணியாற்றி வந்த அப்சரா ரெட்டி, தற்போது அதிமுகவிலும் இருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணையக்கூடும் எனப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.