undefined

“ஓனர் திட்டிக்கிட்டே இருந்தார்...” தந்தையைப் பழிவாங்க 5 வயது மகனைக் கொன்ற டிரைவர்! 

 

வடமேற்கு டெல்லி, நரேலா பகுதியில் 5 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் தந்தையின் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றிய நிது (26) என்பவர், ஓனரைப் பழிவாங்கும் நோக்கில் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், சிறுவன் தனது வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த போது நிது அவனை தன்னுடைய வாடகைக்கு குடியிருக்கும் அறைக்கு ஆசைவார்த்தைக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவனை கத்தி மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு, அறையை வெளியே பூட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குடும்பத்தினர் சிறுவனை தேடிக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் இருந்தவர்கள், சிறுவன் கடைசியாக நிதுவுடன் சென்றதைத் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் நிதுவின் அறைக்கு சென்று பார்த்த போது, அறை பூட்டப்பட்டிருந்தபோதும், ஜன்னல் வழியாக குழந்தை அசைவின்றி இரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று சிறுவனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கெனவே சிறுவன் உயிரிழந்திருந்தது மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டது. இந்த கொலை சம்பவத்துக்குப் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, நேற்று முன்தினம் நிதுவும், மற்றொரு ஓட்டுநருக்கும் இடையே மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து சிறுவனின் தந்தை நிதுவை கேள்வி கேட்டு திட்டியதாகவும், தொடர்ந்து திட்டிக்கொண்டும், தட்டிக்கேட்டு வந்ததாலும் இதற்கு பழிவாங்கும் நோக்கில் நிது சிறுவனை கொன்றதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் நிது மீது கடத்தல் மற்றும் கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நிதுவைத் தேடி சிறப்பு குழுக்களை அமைத்து தேடி வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?