நடுவானில் திடீரென விமானத்தை கடந்த முயன்ற பயணி... வைரலாகும் வீடியோ!
செம்ஸிகோ நாட்டில் உள்நாட்டு விமானம் ஒன்று எல் பாஜியோவில் இருந்து டிஜுவானாவுக்கு பறந்து சென்றுக் கொண்டிருக்கையில் நடுவானில் திடீரென பயணி ஒருவர் விமானத்தைக் கடத்த முயன்றதால், அந்த விமானம் குவாடலஜாராவுக்கு திருப்பி விடப்பட்டது.
இதை தொடர்ந்து பயணிகள் விமானம் மத்திய மெக்சிகோவில் உள்ள குவாடலஜாராவுக்குத் திருப்பிவிடப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் விமான நிறுவன பணியாளர்களால் அந்த பயணி கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவழியாக அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இந்த கடத்தல் காட்சிகளை விமானத்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த கடத்தல் முயற்சி குறித்து வோலாரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அனைத்து பயணிகளும், விமான பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். மீதமுள்ள பயணிகள் தங்க வைக்கப்பட்டு, அவர்களது இறுதி இலக்கை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!