ஆர்வக்கோளாறின் உச்சம்.. இப்படியெல்லாமா வீடியோ வெளியிடுவாங்க? - இன்ஸ்டா பிரபலம் சிம்ரன் கைது!

 

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சிம்ரன், மகாத்மா காந்தியின் உருவப்படத்தை அவமதிக்கும் வகையில் ஆபாசச் செய்கைகளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரத் மாவட்டம் அடாஜன் பகுதியைச் சேர்ந்த சிம்ரனுக்கு இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் (Followers) உள்ளனர். இவர் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தனது பக்கத்தில் மகாத்மா காந்தி குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 


புழக்கத்தில் உள்ள கரன்சி நோட்டில் உள்ள காந்தியின் புகைப்படத்தைக் காட்டி, ஆபாசமான செய்கைகளுடன் அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் கொந்தளிப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இன்ஸ்டாகிராம் பிரபலம் சிம்ரனை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.