இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும்.. வீண் விவாதங்களைத் தவிர்த்திடுங்க - இனி யோக காலம் தான்!
இன்று ஆன்மிக வழிபாட்டிற்கும், சனி பகவானின் அருளைப் பெறுவதற்கும் ஏற்ற ஒரு அற்புதமான நாளாகும். இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்களைப் பார்க்கலாம். இன்று எந்த ராசிக்கு எந்த வழிபாடு பலன் தரும் என்பதையும் தெரிஞ்சுக்கோங்க.
மேஷம்:
உத்தியோகத்தில் உங்களது கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் இன்று கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் திட்டமிட்டுச் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபம் பெறலாம். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் சுமுகமாக முடியும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
வழிபாடு: விநாயகப் பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.
ரிஷபம்:
நீண்ட நாள்களாகத் தள்ளிப்போன முக்கியக் காரியங்கள் இன்று வெற்றிகரமாக முடியும். கூட்டு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களது கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
வழிபாடு: மகாவிஷ்ணுவை வழிபடப் பொருளாதார நிலை மேம்படும்.
மிதுனம்:
இன்று உங்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக அமையும். எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்குப் புதிய மற்றும் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கி மனஅமைதி ஏற்படும்.
வழிபாடு: ஆஞ்சநேயரை வழிபடத் தைரியம் கூடும்.
கடகம்:
அலுவலகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும், உங்களது தனித்திறமையால் அனைத்தையும் குறித்த நேரத்திற்குள் முடிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். தேவையற்ற வெளிவட்டாரப் பேச்சுகளைத் தவிர்ப்பது மனஅமைதிக்கு வழிவகுக்கும்.
வழிபாடு: சிவபெருமானை வழிபடப் பணிகள் தடையின்றி முடியும்.
சிம்மம்:
தொழிலில் நல்ல முன்னேற்றமும், வாடிக்கையாளர்களின் ஆதரவும் பெருகும். பூர்வீக சொத்துச் சம்பந்தமான விவகாரங்களில் அல்லது வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
வழிபாடு: சூரிய பகவானை வழிபட நற்பெயர் உண்டாகும்.
கன்னி:
நண்பர்கள் மற்றும் அரசாங்கத் தரப்பிலிருந்து எதிர்பார்த்த உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். குடும்பத்தினருடன் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
வழிபாடு: நெல்லையப்பரை வழிபட நலம் பயக்கும்.
துலாம்:
வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பணப் பரிவர்த்தனைகளிலும் ஆடம்பரச் செலவுகளிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தேவையற்ற அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வழிபாடு: ஸ்ரீ ரங்கநாதரை வழிபடத் தடைகள் நீங்கும்.
விருச்சிகம்:
நீண்ட நாள்களாக வராமல் இருந்த பழைய கடன்கள் மற்றும் நிலுவைத் தொகைகள் இன்று வசூலாகும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்கள் வழியில் சுப செய்தி ஒன்று தேடி வந்து உங்களை நெகிழ வைக்கும்.
வழிபாடு: முருகப் பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.
தனுசு:
சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்குச் சாதகமான நிறுவனங்களிலிருந்து நல்ல பதில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது இடமாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும்.
வழிபாடு: தட்சிணாமூர்த்தியை வழிபட அறிவுத்திறன் மேம்படும்.
மகரம்:
அரசாங்க வழியில் எதிர்பார்த்த சலுகைகள் மற்றும் அனுமதிகள் எளிதாகக் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழல் ஏற்படும். வெளியூர் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும்.
வழிபாடு: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடத் துன்பங்கள் விலகும்.
கும்பம்:
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய நபர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளைஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் தோன்றி மறையும் என்பதால் போதிய ஓய்வு தேவை.
வழிபாடு: காலபைரவரை வழிபடப் பயங்கள் நீங்கும்.
மீனம்:
தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் உங்களது ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்களது நீண்ட நாள் கனவுகள் நனவாகத் தொடங்கும்.
வழிபாடு: துர்க்கை அம்மனை வழிபட வெற்றிகள் கிட்டும்.