பொதுமக்கள் அதிர்ச்சி... காவிரி ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்... திருச்சியில் பரபரப்பு!

 

திருச்சி அம்மா மண்டபம் காவிரி படித்துறை பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/HNuxrVkpl6I?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/HNuxrVkpl6I/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

திருச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற புனிதத் தலங்களில் ஒன்றான அம்மா மண்டபம் காவிரி படித்துறை பகுதியில், ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென இறந்து ஆற்று நீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. காவிரி ஆற்று நீரில் ரசாயனம் அல்லது கழிவுநீரைக் சட்டவிரோதமாகக் கலந்ததால் நீர் நஞ்சாகி, ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. காவிரி ஆற்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இத்தகைய மாசுபாடுகள் குறித்துச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக அம்மா மண்டபம் பகுதியில் உள்ள காவிரி ஆற்று நீரைக் மாதிரிகளாகச் சேகரித்து ஆய்வு நடத்த வேண்டும். ஆற்றில் கழிவுகளைக் கலந்த நபர்கள் அல்லது ஆலைகள் மீது உடனடியாகச் சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது.