undefined

 மாமனாரை கொன்ற மருமகன்... தானும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

 
 

தமிழகத்தில்  திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில், குடும்ப பிரச்சினையில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகன், தானும் சுட்டு  தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த  எல்லப்பாளையத்தில் வசித்து வருபவர்   பழனிச்சாமி  (70). விவசாயியான இவரது  மகள் அம்பிகா.  இவருக்கு ராஜ்குமார் என்பவருடன் திருமணமாகி இருக்கும் நிலையில், ராஜ்குமார், படியூர் பகுதியில் ஹாலோபிளாக் நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே பழனிசாமிக்கும் , ராஜ்குமாருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சொத்து பிரச்சினைக் காரணமாக கடந்த 6  ஆண்டுகளுக்கு மேலாக இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், இன்று காலை  ராஜ்குமார், தனது மாமனார் பழனிச்சாமி வீட்டிற்கு சென்று தான் மறைத்து எடுத்து சென்ற துப்பாக்கியால் பழனிச்சாமியை, 5 தடவை அடுத்தடுத்து சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பழனிச்சாமி உயிரிழந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு, அதன் பின்னர்  ராஜ்குமார், சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்று, படியூர் பகுதியில்   தன்னை தானே நெத்தியில் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.