ஆசிரியரிடம் கதறியழுத மாணவி... தினந்தோறும் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்த தாயின் கள்ளக்காதலன்!

 

சென்னை சேலையூர் அருகே 6-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த நபரைப் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை சேலையூர் அடுத்த பதுவஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (29). இவர் தன்னுடன் வாழ்ந்து வரும் பெண்ணின் 6-ம் வகுப்பு படிக்கும் மகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்துத் தாயிடம் சிறுமி கூறியும் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அச்சிறுமி, தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்துக் கூறி அழுதுள்ளார். சிறுமி கூறிய அதிர்ச்சித் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர், உடனடியாக இது குறித்துச் சிட்லப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.’

புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய சிட்லப்பாக்கம் மகளிர் காவல்துறையினர், மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.