மாரடைப்புக்கான அறிகுறிகள் சில நாட்களுக்கு முன்பே வரலாம்... அதிகம் உணரப்படாத ஆர்த்தோப்னியா... மருத்துவர்கள் எச்சரிக்கை!
பொதுவாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது ஏற்படும் மாரடைப்பு, பல நேரங்களில் திடீரென அல்லது மெதுவாக உருவாகலாம். இதன் அறிகுறிகளைப் பற்றி விழிப்புணர்வு அவசியம் என டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் ஒபைதுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒபைதுர் ரஹ்மான் இது குறித்து கூறுகையில், “மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே அதற்கான அறிகுறிகள் உடலில் தோன்றும். ஆனால் 92 சதவீதம் பேர் அதை உணர்வதில்லை” என்றார்.
அதில் முக்கியமான ஒன்று “ஆர்தோப்ப்னியா (Orthopnea)” எனப்படும் மூச்சுத் திணறல். ஒருவர் படுத்திருக்கும் நிலையில் மூச்சு விட கடினமாக இருப்பது இதன் முக்கிய அடையாளம். உட்கார்ந்தவுடன் அல்லது நின்றவுடன் மூச்சு விடுவது சுலபமாகி விடும். இதுவே இதயத்தின் செயலிழப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்கிறார் மருத்துவர் ரஹ்மான்.
இது குறித்து மருத்துவர் ரஹ்மான் விளக்கமளிக்கையில், “இதயம் பலவீனமாவதால் இரத்தம் நுரையீரல்களில் தேங்குகிறது. அதனால் ஒருவர் நேராக படுத்தால் மூச்சு அடைப்பாக உணரப்படும். பலர் இரவில் வியர்வையுடன் தூக்கம் வராமல் விழித்து விடுவார்கள். இதை பெரும்பாலோர் புறக்கணிக்கிறார்கள்” என்றார்.
இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் பல தலையணைகள் வைத்து தலையை உயர்த்தி படுத்துக் கொள்வார்கள். சிலர் நாற்காலியில் அமர்ந்து தூங்குவது வழக்கமாக இருக்கிறது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், இதய செயலிழப்பு, நுரையீரல் உயர் அழுத்தம், நீண்டகால சுவாச நோய் (COPD), பெருந்தூக்கம், நுரையீரல் நீர் தேக்கம், கடுமையான நிமோனியா போன்ற நோய்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். இது போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகுவது உயிர் காப்பதற்கு முக்கியம் என மருத்துவர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
ஆர்த்தோப்னியா பொதுவாக மிகவும் கடுமையான நிலையின் அறிகுறியாக இருப்பதால், நீங்கள் சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது முக்கியம். இதயம் பலவீனமடையும் போது, இரத்தம் நுரையீரலுக்குள் திரும்பும்" என்று டாக்டர் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் விளக்கி உள்ளார்.
ஆர்த்தோப்னியா எதனால் ஏற்படுகிறது?
பொதுவாக ஒரு அடிப்படை மருத்துவ நிலை ஆர்த்தோப்னியாவுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நிலைமைகள் உங்கள் நுரையீரலைச் சுற்றி திரவம் உருவாக காரணமாகின்றன அல்லது அவை விரிவடைந்து காற்றை உள்ளிழுப்பதை கடினமாக்குகின்றன. நீங்கள் தரையிலோ, மெத்தையிலோ தட்டையாகப் படுக்கும் போது உங்கள் இரத்தம் உங்கள் கால்களிலிருந்து நுரையீரலுக்கு மறுபகிர்வு செய்யப்படுகிறது. இது உங்கள் நுரையீரலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதனால் சுவாசிப்பதை கடினமாக்குகிறது. உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருந்தால், அது இந்த கூடுதல் இரத்தத்தை வெளியேற்றுகிறது.
எனினும் உங்கள் இதயம் பலவீனமாக இருந்தால், இதைச் செய்ய அது போதுமான வலிமையைக் கொண்டிருக்கவில்லை. அதனால் தான் நீங்கள் எழுந்து உட்கார்ந்து மீண்டும் இரத்தத்தை மறுபகிர்வு செய்யும் போது, சுவாசிப்பது எளிதாக இருக்கும்.
ஆர்த்தோப்னியாவை ஏற்படுத்தக்கூடிய அல்லது அதற்கு ஆபத்தை விளைவிக்கும் சில மருத்துவ நிலைமைகளாக இதய செயலிழப்பு, நுரையீரல் உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், உடல் பருமன், நுரையீரல் வீக்கம், கடுமையான நிமோனியா போன்றவைகளைக் கூறலாம் என்று எச்சரிக்கிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!