இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் மருந்து நிறுவனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளித்து அமெரிக்கா அறிவிப்பு!

 

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் வரிகளை முழுமையாக ரத்து செய்து அமெரிக்க வர்த்தகத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும், கஜானாவை நிரப்பவும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராகக் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் இந்திய மருந்து ஏற்றுமதியாளர்கள் பெரும் சுமையைச் சந்தித்து வந்தனர்.

அரிய வகை நோய்கள் மற்றும் குறிப்பிட்ட உபபொருட்கள், மலட்டுத்தன்மை சிகிச்சை மருந்துகள், கால்நடை சுகாதாரப் பொருட்கள், மரபணு சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் காப்புரிமை பெற்ற சில இறக்குமதிப் பொருட்களுக்கு இந்த 100 சதவீத வரி விலக்கு முழுமையாகப் பொருந்தும்.

வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவின் மூலம், இந்தியா மற்றும் பிற 19 நாடுகளின் மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பயனடைந்துள்ளதுடன், வர்த்தக வட்டாரத்தில் பெரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.