வைரலாகும் வீடியோ... பெண் சப்-இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ மகள் - வழக்குப் பதிவு!

 

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் சப்-இன்ஸ்பெக்டரை, பாஜக எம்.எல்.ஏவின் மகள் கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

துமக்கூரு ஊரகம் தொகுதி பாஜக எம்.எல்.ஏ சுரேஷ் கௌடாவின் மகள் ஐஸ்வர்யா, மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே உள்ள ஆரத்தி உக்கடா கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் சவிதாவிடம், வரிசையைத் தவிர்த்து கருவறைக்குள் நுழைய அனுமதி கேட்டுள்ளார். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் 2 நிமிடங்கள் காத்திருக்குமாறு அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/Gdnq2MP45XI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Gdnq2MP45XI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, தனது எம்.எல்.ஏ பின்னணியைக் குறிப்பிட்டு அதிகாரியிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், பெண் சப்-இன்ஸ்பெக்டரை ஐஸ்வர்யா கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த மோதல் தொடர்பான சிசிடிவி / வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் கியாதனஹள்ளி காவல் நிலையத்தினர் ஐஸ்வர்யா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெண் அதிகாரி தன்னைத் தவறாகப் பேசியதாக ஐஸ்வர்யா தரப்பிலும் எதிர் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தனது மகள் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனச் சம்பவத்திற்கு எம்.எல்.ஏ சுரேஷ் கௌடா பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.