வைரலாகும் வீடியோ... திரைத்துறையில் 51 ஆண்டுகள் - 'தர்மன்' படப்பிடிப்பில் ரஜினிக்குக் கேக் வெட்டிக் கொண்டாட்டம்!

 

தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைத்துறையில் தனது 51-வது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைக் கொண்டாடும் வகையில் அவருக்குப் படக்குழுவினர் சார்பில் சிறப்பான வரவேற்பும் கொண்டாட்டமும் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடித்துவரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இந்த விழா நடைபெற்றது. படப்பிடிப்பு இடைவேளையின் போது பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு படக்குழுவினரால் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகால திரையுலக சாதனை கொண்டாடப்பட்டது.

allowfullscreen

1975-ம் ஆண்டு இயக்குநர் சிகரம் பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த், தனது தனித்துவமான ஸ்டைல், சுறுசுறுப்பான நடிப்பு மற்றும் மாஸ் மேனரிசங்களால் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து வருகிறார். அரை நூற்றாண்டைக் கடந்தும் குறையாத அதே சுறுசுறுப்புடனும் ஈர்ப்புடனும் நடித்து வரும் ரஜினிகாந்துக்குச் சமூக வலைத்தளங்களில் திரையுலக பிரபலங்களும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.