வைரலாகும் வீடியோ... ரஜினியின் பக்கத்து வீட்டு பெண்மணி ஆவேசம்... தொல்லைத் தர்றது ரஜினிக்கு சரியா?!
பிறந்தநாள், தீபாவளி, புது வருஷம், பொங்கல் என விசேஷ நாட்களில் இப்படி ரசிகர்கள் கூட்டத்தினால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எல்லாம் தொந்தரவு ஏற்படுகிறது. இப்படி ரசிகர்களை தனது கல்யாண மண்டபத்தினுள்ளோ அல்லது வேறேதேனும் தனிப்பட்ட இடத்தில் சந்திக்காமல் சுற்றிலும் இருக்கும் வீட்டாரை எல்லாம் தொந்தரவு செய்வது ரஜினிக்கு சரியா? என்று போயஸ் கார்டனில் ரஜினியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்மணி இன்று செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்தால் தங்களுக்குத் தொல்லை ஏற்படுகிறது என ஆவேசமாக பேசி உள்ளார். இந்த காணொளி இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் தான் இன்று நடிகர் ரஜினிகாந்தின் பக்கத்து வீட்டு பெண்மணி ரஜினிகாந்த்தால் தொந்தரவு என செய்தியாளர்களிட்ம சண்டை போட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது, "உங்கள் தலைவர் வீட்டு கேட்டைத் திறந்து ரசிகர்களை உள்ளே விடுங்கள். ஏன் எங்கள் வீட்டின் முன்பு தொந்தரவு செய்கிறீர்கள்? நாங்களும் தான் டேக்ஸ் கட்டுறோம். இதே ஏரியாவில் காலங்காலமாக குடியிருக்கோம். எங்களுக்கெல்லாம் எந்த ஸ்பெஷலும் கிடையாது. இங்களுக்கு மட்டும் என்ன இருக்கு? ஒவ்வொரு முறையும் இப்படி ரசிகர்கள் இங்க வருவது எங்களுக்கு தொல்லையா இருக்கு. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?" என அங்கிருந்த செய்தியாளர்களை பார்த்து ஆவேசம் ஆகியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.