வைரலாகும் வீடியோ... ஒரே நிறத்தில் உடையணிந்து ஜோடியாக காரில் வந்திறங்கிய விஜய் - த்ரிஷா!
சென்னையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகிய இருவரும் ஒரே நிறத்தில் உடையணிந்து ஒன்றாக ஒரே காரில் வந்திறங்கி கலந்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், பிரபல ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகிய இருவரும் ஒரே காரில் ஒன்றாக வந்து இறங்கியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே விவாகரத்து தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக நீண்ட காலமாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்தச் சூழலில், விவாகரத்துச் சர்ச்சைகளுக்குப் பிறகு விஜய் கலந்துகொள்ளும் முதல் திருமண விழா இதுவாகும். ஏற்கனவே பாடகி சுசித்ரா போன்றோர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், இருவரும் பொதுவெளியில் ஒன்றாகத் தோன்றியிருப்பது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைகளை ஒருபுறம் தள்ளிவிட்டு, மணமக்களை நேரில் சந்தித்த விஜய் மற்றும் த்ரிஷா அவர்களுக்கு மலர்க்கொத்து வழங்கித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யின் 'பிகில்' மற்றும் 'தி கோட்' ஆகிய படங்களைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. அந்த நெருக்கத்தின் காரணமாகவே விஜய் இந்த விழாவில் கலந்துகொண்டார்.