பகீர் வீடியோ.. சூப்பர்மார்க்கெட்டில் குண்டு வீசிய இஸ்ரேல் .. தலை தெறிக்க ஓடும் மக்கள்..!
Oct 24, 2023, 16:10 IST
காசாவில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் இஸ்ரேல் குண்டு வீசிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் 18 வது நாளை எட்டியுள்ளது.அடுத்தக் கட்டமாக வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. எல்லையில் தனது துருப்புகளை இஸ்ரேல் குவித்து வருகிறது. முன்னதாக இஸ்ரேல் காசா மீது ஞாயிற்றுக்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏராளமானோர் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 17ம் தேதி சூப்பர் மார்க்கெட் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. காசாவின் நசீரத் அகதிகள் முகாமில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இஸ்ரேல் குண்டு வீசியுள்ளது.