undefined

 பகீர் வீடியோ... இளம்பெண் மீது இரும்பு கம்பி, உருட்டு கட்டையால் தாக்குதல்... மசூதி அருகே பயங்கரம்!  

 
கர்நாடக மாநிலத்தில்  தவனகெரே மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜமால் அஹமது ஷமீர். இவருக்கு தனது மனைவி ஷபினா பானுவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜமால் அஹமது ஷமீர் என்பவர் மசூதி நிர்வாகத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில்  38 வயதான ஷபினா பானு என்பவரை சிலர் உருட்டுக்கட்டை மற்றும் இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் சிசிடிவி மற்றும் செல்போன் வீடியோ மூலம் வெளியாகி பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

<a href=https://youtube.com/embed/gafSsNgHecA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/gafSsNgHecA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Woman Brutally Assaulted Outside Mosque in Karnataka's Davanagere; 6 Arrested | News9" width="700">
முன்னதாக, ஷபினா பானுவின் உறவுக்கார பெண் நஸ்ரின், அவரது குழந்தைகள் மற்றும் ஃபயாஸ் என்பவருடன் புக்கம்புடி மலைக்கு சென்றிருந்தார். அதன்பின் இரவு நேரமாகிவிட்டதால் நஸ்ரினும் ஃபயாஸும் பானுவின் வீட்டில் தங்கியுள்ளனர்.
வீடு திரும்பிய கணவர், வீட்டில் மூவரையும் பார்த்ததும், ஷபினாவின் நடத்தையில் சந்தேகம் எனக் கூறி, மசூதி நிர்வாகத்தில் புகார் அளித்தார். அதன்பின் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஷபினா பானுவை நேரில் தாக்கியதுதான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, முகமது நியாஸ், முகமது கவுஸ்பீர், சந்த் பாஷா, இனாயத் உல்லா, தஸ்தாகிர் மற்றும் ரசூல் ஆகிய 6பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சமூகத்தில் பலரும் இந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக வலியுறுத்தி, நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!