undefined

தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பெண் திடீர் விவாகரத்து.. ஒரே குழப்பம் !!

 

ஆண்- பெண் திருமணத்தை தாண், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துக்கொள்வது, ஒரு ஆண் மற்றொரு ஆணை திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு தற்போது அதிகம் நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துக்கொள்ளும் நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

அப்படி தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட பெண், அடுத்த 24 மணி நேரத்தில் அவரை விவாகரத்து செய்துள்ளார். இதற்கான காரணம் என்னவாக இருக்கும் எனவும் பலரும் யோசித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

அவரது திருமணத்திற்கு அவரே திருமண கேக்கை தயார் செய்துள்ளார். சோஃபி தனது பதிவில், இன்று என் வாழ்க்கையின் மிக மோசமான தருணங்களில் ஒன்று. இனி என்னால் இதை தாங்க முடியாது. என்று கூறியதோடு நான் ஒரு திருமண ஆடையை வாங்கி என்னை திருமணம் செய்து கொள்ள ஒரு திருமண கேக்கை தயார் செய்தேன், என்று கூறியுள்ளார்.

சோஃபியின் பதிவிற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதில் ஒருவர், சோஃபியை தயவு செய்து நீங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகுவது நல்லது என்று கூறியுள்ளார். மற்றொருவர், திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.  

இப்படி கூத்து நடந்துவந்த நேரத்தில், திருமணம் செய்துக்கொண்டதாக அறிவித்த அடுத்த மணி நேரத்துக்குள் சோஃபி தான் தன்னை விவகாரத்து செய்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதற்கும் நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர்.