undefined

அட...  ரூ2484 கோடி சொத்துக்களை விட்டு காதலனை கரம் பிடித்த இளம்பெண்!!

 

மலேசிய தொழில் அதிபர் கூ கே பெங். இவருக்கு வயது 78. கூ கே பெங், மலாயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸின் தலைவர்  . அதாவது  சொகுசு பிராண்டுகள் மற்றும் ஓட்டல்களில் பெரும் பங்குகளைக் கொண்ட பெரும் முதலீட்டு நிறுவனம்.  2015ல் போர்ப்ஸ் பத்திரிகையில் மலேசியாவின் 50 பணக்காரர்களில் 44 வது இடத்தைப் பிடித்தவர். அவரது சொத்தின் நிகர மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள்  . இவருடைய மகள்   ஏஞ்சலினா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த சக மாணவரான ஜெடிடியாவை காதலித்து வந்தார். தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்த போது  அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பணம், சொத்து, அந்தஸ்து போன்ற காரணங்களை கூறி ஏஞ்சலினாவின் காதலை அவரின் தந்தை ஏற்கவில்லை. இதன் காரணமாக  பரம்பரை சொத்துகள் அனைத்தையும் உதறி விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்துகொண்டு  புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்திருந்தார். ஏஞ்சலினாவும், ஜெடிடியாவும் 2008ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.  ஏஞ்சலினா தனது பெற்றோரின் விவாகரத்தில் சாட்சிக்காக நீதிமன்றத்திற்கு   அழைக்கப்பட்டார்.  தந்தை பணம் சம்பாதித்து கொண்டிருந்த போது தாய் தான் முழுவதுமாக  குடும்பத்தை பார்த்துக் கொண்டதால் தனது  ஆதரவாக ஏஞ்சலினா கருத்து தெரிவித்தார்.

 வெகுவிரைவில் தாயும், தந்தையும்  மீண்டும் ஒன்றாக சேர்வார்கள் எனக் கூறினார்.  ஏஞ்சலினாவின் கதையும் காதலைப் பற்றிய அவரது நேர்மறையான கருத்தும் உலகம் முழுவதும் பெரும் பேசுபொருளாகி வருகிறது.  இது குறித்து ஏஞ்சலினா கூறும்போது ”நாம் விரும்பினால் எப்போதும் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அன்பு விலைமதிப்பற்றது. பணம் பல எதிர்மறை குணங்களுடன் வருகிறது. பிரச்சனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் அன்பு மட்டுமே மகிழ்ச்சியைத் தரும்” எனக் கூறியுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!