உலக நாடுகள் நிம்மதி... மத்திய கிழக்கில் ஓய்ந்தது போர்... தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா!

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 13 நாட்களாக அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தீவிரமாக நடைபெற்று வந்த பரஸ்பர வான்வழித் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருதரப்புப் பேச்சுவார்த்தையில் சுமுக முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு அமைதி திரும்பியுள்ளது.

கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்றமான நிலையில்,  அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் அரபு நாடுகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியதுடன், சர்வதேசக் கடல் வர்த்தகத்தின் முக்கியப் பாதையான 'ஹர்முஸ் ஜலசந்தியையும்' மூடியது. இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டு, அதன் விலை சர்வதேசச் சந்தையில் கடுமையாக உயர்ந்தது.

இடைக்கால உடன்பாடுகளுக்குப் பின்னரும் மீண்டும் தீவிர மோதல் வெடித்து, கடந்த 13 நாட்களாக இரு தரப்பினரும் மிகக் கொடூரமான பரஸ்பரத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற தூதரகப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது:

பேச்சுவார்த்தையின் பலனாக அமெரிக்கா உள்ளிட்ட படைகள் தங்களது தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. இதனால் கடந்த சில வாரங்களாகப் பெரும் போர் மேகம் சூழ்ந்திருந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது தற்காலிக அமைதி நிலவி வருகிறது.