அதிர்ச்சி வீடியோ!! ரயில் தண்டவாளத்தில் தள்ளி விட்டு இளைஞர் கொலை!!
மும்பை புறநகரில் சியோன் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் தினேஷ் எனத் தகவல்கள் கூறுகின்றன. அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி அந்த இளைஞரை தம்பதிகள் சேர்ந்து ரயிலின் முன் தள்ளிவிட்டது பதிவாகியுள்ளது.
தினேஷ் நடந்துவரும் போது ஷீத்தல் மானே என்ற பெண் மீது தெரியாமல் மோதிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண், இளைஞர் தினேஷை குடையால் பலமுறை தாக்கினார்.
அருகில் இருந்த ஷீத்தலின் கணவர் அவினாஷ், இளைஞரை கன்னத்தில் அறைந்த போது நிலை தடுமாறிய தினேஷ் தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
இந்த காட்சி சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அப்போது கீழே விழுந்த இளைஞரைக் காப்பாற்ற அருகில் இருந்த மற்ற பயணிகள் முயற்சி செய்தனர்.அந்த சமயத்தில் மிக விரைவாக வந்த ரயில் ஒன்று மோதியதில் இளைஞர் தினேஷ் உடல் நசுங்கி பலியானார். இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஷீத்தல், அவரது கணவர் அவினாஷ் இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!