தேனி சிறையில் கைதிகள் தப்பியது எப்படி? சிறைத்துறை விளக்கம்
Updated: Oct 27, 2026, 15:42 IST
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சிறையின் 3-வது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி சில கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, சிறைக் காவலர் ஸ்டாலின் பிரபு உள்ளே சென்று பார்த்தபோது, அவரை கைதிகள் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காவலர்களைத் தாக்கிய கைதிகள், அவர்களிடம் இருந்த சாவியைப் பறித்துக்கொண்டு சிறையின் பிரதான வாயில் வழியாகத் தப்பிச் சென்றதாக சிறைத்துறை விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.