தேசியக் கொடிக் கம்பத்தில் மதுபாட்டில் தொங்கவிட்ட மர்ம நபர்கள்… அரசுப் பள்ளியில்  அதிர்ச்சி வீடியோ! 

 

 

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரியணம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், தேசியக் கொடிக் கம்பத்தில் காலி மதுபாட்டில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

allowfullscreen

இந்தப் பள்ளியின் பாதுகாப்பு வேலியைத் தாண்டி நள்ளிரவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர், பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் காலி மதுபாட்டிலை, தேசியக் கொடியேற்றும் கம்பத்தின் கயிற்றில் கட்டி, கொடி பறப்பது போல கம்பத்தின் உச்சியில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர்.

காலையில் இதைக் கவனித்தவர்கள் அளித்த தகவலின் பேரில், கோம்பை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். கம்பத்தில் தொங்கிய மதுபாட்டிலை அகற்றி பறிமுதல் செய்தனர்.

போலீசார் விசாரணை

அரசுப் பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, தேசியக் கொடிக் கம்பத்தில் மதுபாட்டிலைத் தொங்கவிட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்