இந்த 3 ராசிக்காரர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.. வேலைவாய்ப்பு மாற்றங்களை ஏத்துக்கோங்க!

 

மேஷம்

தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல்நலக் குறைபாடுகள் லேசாகத் தோன்றி மறையும். செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நிதி நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

ரிஷபம்

முக்கியக் காரியங்களை நிதானத்துடன் கையாள்வது நல்லது. அலுவலகத்தில் நிலுவையில் இருந்த வேலைகளைத் திட்டமிட்டு முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத பணவரவு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம்

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உடன்பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

கடகம்

தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம்

எதிர்பாராத பணவரவுகள் திடீரென்று கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் கடன்கள் குறையும். சொத்து அல்லது வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கன்னி

பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலை இடத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். விடாமுயற்சியால் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

துலாம்

நண்பர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். நிதி மேலாண்மையில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம்

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

தனுசு

முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி அல்லது சந்திப்பு திருப்பத்தை ஏற்படுத்தும். பயணங்களால் யோகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: தங்கம் / மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

மகரம்

சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளைத் தள்ளி வைப்பது நல்லது. இறை வழிபாட்டால் நிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம்

அமைதியாகச் செய்து வரும் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும் நேரம் இது. வேலை அல்லது தொழிலில் புதிய பொறுப்புகளும் மாற்றங்களும் வரலாம். பண விஷயங்களில் எதிர்பாராத வரவு மனநிறைவைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை

அதிர்ஷ்ட எண்: 7

மீனம்

உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்த மகிழ்ச்சி மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 1