இந்த 4 ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்கள்... இதுவரை இழுபறியான காரியங்களை இப்போது முயற்சி பண்ணுங்க!

 

மேஷம்

எடுத்த காரியத்தில் வேகமும் விவேகமும் கைகொடுக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த விஷயங்கள் நகரத் தொடங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகளும் உத்தியோகத்தில் சிறப்பும் உண்டாகும்.

ரிஷபம்

முயற்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் உறுதியான பலனைத் தரும். சகோதரர்களிடம் பேசும்போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த கோளாறுகள் படிப்படியாக விலகி சுபிட்சம் உண்டாகும்.

மிதுனம்

சக ஊழியர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும் என்றாலும் எடுத்த வேலையைச் சிறப்பாக முடித்து நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும்.

கடகம்

தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, வருமான உயர்வு போன்ற சாதகமான பலன்கள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

சிம்மம்

எண்ணிய காரியங்கள் தி திட்டமிட்டபடி தடையின்றி முடியும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும்.

கன்னி

கோபத்தைக் குறைத்துக் கொண்டு கவனமாகச் செயல்படுவது நல்லது. வியாபாரம், கமிஷன் மற்றும் கான்ட்ராக்ட் துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபமும் தாராள பணவரவும் உண்டாகும்.

துலாம்

நீண்ட நாட்களாக அலைக்கழித்த நிலுவை வேலைகள் முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்

சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனமாகக் கவனிப்பது நல்லது. வேலை மற்றும் தொழிலில் எதிர்பாராத நல்ல வாய்ப்புகளும் முக்கியமான தொடர்புகளும் உருவாகும். நிதி நெருக்கடிகள் விலகும்.

தனுசு

நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுப காரியப் பேச்சுகள் வெற்றிகரமாக முடியும். தொழில் விரிவாக்க சிந்தனைகள் மேம்படும்.

மகரம்

வேலைச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிட்டும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் கூடும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.

கும்பம்

பணவரவு சிறப்பாக இருக்கும். பழைய கடன்கள் அடைபடும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபச் செய்திகளும் வந்து சேரும்.

மீனம்

நீண்ட நாட்களாகக் காத்திருந்த விஷயங்களில் சாதகமான நகர்வு ஏற்படும். எதிர்பாராத நல்ல செய்தி அல்லது சந்திப்பு மனதில் புதிய நம்பிக்கையை விதைக்கும்.