லட்சுமி யோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு பணமழை.. சுபசெலவாக மாத்திக்கோங்க!
இன்றைய கிரகங்களின் சுழற்சி மற்றும் சந்திரனின் சஞ்சாரத்தின் அடிப்படையில், குறிப்பாக 5 ராசிகளுக்கு மகாலட்சுமியின் முழு அருளால் "லட்சுமி யோகம்" கை கூடி வருகிறது. இன்று வியாழக்கிழமை லட்சுமி யோகம் கூடியுள்ளதால், காலையில் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். மேலும் மாலை வேளையில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் சாற்றி வழிபடச் சகல காரியங்களும் சித்தியாகும்.
மிதுனம்: எதிர்பாராத புதையல் யோகம். இன்று உங்களுக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும் "லட்சுமி யோகம்" முழுமையாகக் கிடைக்கிறது. நீண்ட நாட்களாக வராத பழைய கடன்கள், முடங்கிக் கிடந்த சொத்து விபரங்கள் சுமுகமாக முடிந்து கைகளில் பெரிய தொகை புழங்கும். கூட்டுத் தொழிலில் திடீர் திருப்புமுனையாகப் புதிய ஆர்டர்கள் கிடைத்து லாபம் இரட்டிப்பாகும்.
கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டலட்சுமி கடாட்சம். மனதில் இருந்த பயங்கள் நீங்கி, பணப்புழக்கம் தாறுமாறாக உயரப் போகும் நாள். புதிய முதலீடுகள் மூலம் உங்களை நாடிப் பணம் வரும். வங்கிச் சேமிப்பு கணிசமாக உயரும். நிலுவையில் இருந்த சம்பள உயர்வும், எதிர்பார்த்த பதவியும் தேடி வர வாய்ப்புகள் அதிகம்.
துலாம் ராசியினருக்கு ராஜபோக வாழ்க்கை. இன்று உங்களின் கௌரவமும், பொருளாதார நிலையும் உச்சத்தைத் தொடப் போகிறது. புதிய ஆடை, ஆபரணங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான லட்சுமி யோகம் கைகூடி வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, உங்களின் வியாபாரக் கடன் சுமை முற்றிலும் குறையும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குபேர யோகம். சவாலான காரியங்களையும் அசால்ட்டாக முடித்து, பெரிய லாபத்தைக் காணப் போகிறீர்கள். லாட்டரி, கமிஷன் அல்லது பூர்வீக சொத்துக்கள் மூலம் எதிர்பாராத ஒரு பெரிய தொகை கைக்கு வந்து சேரும். வீட்டில் நிலவி வந்த பணத் தட்டுப்பாடுகள் நீங்கி, சுப காரியங்கள் இன்று முதல் வேகம் எடுக்கும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் உச்சம். நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடியே தடையில்லாமல் முடியப் போகும் அதிர்ஷ்ட நாள். ஷேர் மார்க்கெட் அல்லது பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு லாபம் கொட்டும். கடன்கள் முற்றிலுமாகக் குறைந்து, நிம்மதியான தூக்கம் வரும்.