"அசிங்கமாவும் ஆபாசமாகவும் பேசுறாங்க" - மதுராந்தகம் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கடும் குற்றச்சாட்டு!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் விஜய், தங்களுக்கு எதிராக எழுப்பப்படும் அவதூறுகள் குறித்தும், தி.மு.க மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துப் பேசியுள்ளார்.
மதுராந்தகத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தவெக ஆட்சிக்கு வரக் கூடாதா என்றும், ஒரு தனிக்கட்சியாக, சாமானியர்களின் கட்சியாக, ஊழலை ஒழிக்கும் இயக்கமாகத் தங்களால் அரசியலில் வெற்றி பெறக் கூடாதா என்றும் கேள்வி எழுப்பினார்.
தங்களை எதிர்ப்படும் தீயசக்தி கட்சியான தி.மு.கவினர், தங்களைப் பார்த்துத் தொடர்ந்து அவதூறாகவும், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசி வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், அரசியல் ரீதியான விமர்சனங்களை விடுத்து இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் அவர்கள் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டார்.
தான் சினிமாவிலும் சரி, தற்போது அரசியலிலும் சரி இந்த அளவுக்கு வென்று வருவதற்குத் தமிழ்நாட்டு மக்கள்தான் முழுமையான காரணம் என்றும், மக்களின் ஆதரவுடன் அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.