“திமுக முட்டு, சொம்பு என்றார்கள்..” - திருமாவளவன் பேச்சு!
நாம் எந்த அரசியல் முடிவு எடுத்தாலும் விமர்சிக்க ஒரு கூட்டம் எப்போதும் இருப்பதாகவும், திமுக கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தாலும் யாரும் பாராட்டியிருக்க மாட்டார்கள் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தாங்கள் எத்தகைய அரசியல் முடிவை எடுத்தாலும் அதைத் விமர்சிப்பதற்கென்றே ஒரு தரப்பினர் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், தொடர்ந்து திமுக கூட்டணியிலேயே தாங்கள் தொடர்ந்திருந்தாலும் கூட எவரும் தங்களைப் பாராட்டியிருக்க மாட்டார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சிகள் தங்களை எள்ளிப் பேசுவதைக் குறிப்பிட்ட அவர், "திமுக முட்டு, சொம்பு என்று தான் தினமும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்" என்று தாங்கள் எதிர்கொண்ட விமர்சனங்களைப் பகிரங்கமாகப் பேசினார்.
சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் இனி எப்போதுமே கூட்டணி ஆட்சிதான் என்ற நிலை உருவாகியுள்ளதாகவும், அதற்கான வாய்ப்பு கனிந்துவந்த போதே அமைச்சரவையில் இணைந்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.