"கூட்டணியே தேவையில்லை என்கிறார்கள், பரிசீலிப்போம்" - மு.க.ஸ்டாலின்!

 

தமிழக அரசியல் களம் தற்பொழுது தவெக மற்றும் திமுக ஆகிய இரு துருவங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், திருவாரூரில் இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  "திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகளை நான் எப்போதுமே கையை விட்டு விட மாட்டேன். கூட்டணித் தர்மத்தை திமுக எப்போதும் மதிக்கும். ஆனால், அவர்களாகவே கூட்டணியை விட்டு வெளியேற நினைத்துப் போனால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது."

"இன்றைய அரசியல் சூழலில், திமுகவிற்கு இனி எந்தவொரு கூட்டணியும் தேவையில்லை, நாம் தனித்தே களம் காண வேண்டும் என்று கட்சிக்காரர்களும், அரசியல் ஆலோசகர்களும் சொல்கிறார்கள். அவர்களின் அந்தச் சொல்லையும் நாம் தீவிரமாகப் பரிசீலிப்போம்," என்று அவர் அதிரடியாகக் குறிப்பிட்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் கூட்டணிக் கட்சிகள் சில தவெக அரசை நோக்கியும், சமூக நீதிப் பேசும் புதிய அரசியல் நகர்வுகளை நோக்கியும் மெல்ல நகரத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் திருவாரூர் மேடையில் "கூட்டணியே தேவையில்லை என்ற கருத்தையும் பரிசீலிப்போம்" எனக் குறிப்பிட்டிருப்பது, வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்தடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக எவரையும் நம்பியிருக்காமல் தனித்து களம் இறங்குவதற்கும் தயாராகி வருகிறது என்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.