"எனது தோட்டத்திலேயே மின் ஒயரைத் திருடிவிட்டார்கள்" - சட்டப்பேரவையில் இபிஎஸ் குற்றச்சாட்டு!
Sep 3, 2026, 20:50 IST
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், தொடர் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் நிம்மதியாகத் தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனது தோட்டத்திலேயே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மின் மோட்டாருக்குப் பயன்படுத்தப்படும் மின் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.