"இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள்" - அன்பில் மகேஷ் கைது குறித்து தவெக!

 

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது எக்ஸ் தளத்தில் திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பதிவு வெளியிட்டுள்ளது.

"நாங்கள்தான் ஆலமரம்… யார் ஆண்டாலும் நாங்கள்தான் ஆளும் கட்சி" என்று கொக்கரித்த திமுகவின் முகத்திரை கிழிகிறது என்றும், இனிவரும் காலம் திமுகவிற்கு 'திக் திக்' நிமிடங்களாக இருக்கும் என்றும் சாடியுள்ளது.

பள்ளி மாணவர்களின் கல்வியுடன் தொடர்புடைய வழக்கில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் 'நடிப்பு அரக்கன்' அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு வேலைக்கான தேர்வுகளுக்குப் படித்த இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்த விவகாரத்தில் திமுகவின் மற்றொரு முன்னாள் அமைச்சரின் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

"கொள்கைதான் உயிர்" என்று மேடைகளில் முழங்கிவிட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதே பண்ணையார் கட்சியான திமுகவின் வரலாறு எனக் குற்றம் சாட்டியுள்ளது.

"ஆறே மாதத்தில் இந்த ஆட்சி முடிந்துவிடும்" எனச் செல்லும் திருமண மேடைகளிலெல்லாம் புலம்பி வரும் 'Sweet Uncle' முன்னாள் முதல்வர் ஸ்டாலின், இனி வரும் நாட்களில் திமுக ஒரு தீய சக்தி மட்டுமல்ல, ஊழலின் ஊற்றுக்கண் என்றும் மக்கள் பேசுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.